திடீரென தூக்கில் தொங்கிய இளம் பெண்! உள்ளாடையில் ஒளித்து வைத்த கடிதத்தில் திடுக்கிடும் தகவல்!
தஞ்சாவூர், ஆவணம் பெரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (31). இவருக்கும், திட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழழகிக்கும் (26) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால், இவர்களுக்கு இன்னும் குழந்தை கிடையாது. இந்நிலையில், பாலமுருகன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், தமிழழகி மாமனார், மாமியாருடன் வாழ்ந்து வருகிறார்.
இதனையடுத்து, கடந்த 4ம் தேதி இரவு தமிழழகி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தமிழழகியின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார்.
இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், தமிழழகியின் உடலை பிரேத பரிசோதனை செய்த போது, அவரது உள்ளாடையில் கடிதம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
அந்தக் கடிதத்தில், தன்னுடன் 3 பேர் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் பெயர்களையும் தமிழழகி குறிப்பிட்டிருந்தார். மேலும், தொடர்பு குறித்து வெளியே தெரியவந்ததால் அவமானத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக குறிப்பிட்டிருந்தார்.
இதனையடுத்து ஆகாஷ் (வயது 21), அதே பகுதியில் டீக்கடை நடத்தி வரும் கண்ணன் என்பவரின் மகன் மணிகண்டன் (28) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டுதல், வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.