சாக்லேட் வாங்க வந்த 7 வயது சிறுமியை கடைக்குள் அழைத்து பாலியல் வன்கொடுமை செய்தவன் கைது!
வேலூர் மாவட்டம், அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்தவர் ஜாபர் (23). இவர், அதே பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு ஜூலை 4-ம் தேதி 7 வயது சிறுமி சாக்லேட் வாங்க கடைக்கு வந்தாள்.
அப்போது ஜாபர், அந்த அச்சிறுமியை கடைக்குள் அழைத்து சென்றுள்ளார். அப்போது அச்சிறுமியிடம் பாலியல் தொல்லை கொடுத்து வன்கொடுமை செய்துள்ளார். சிறிதுநேரம் கழித்து அச்சிறுமிக்கு தேவையான பொருட்களை கொடுத்து அனுப்பியுள்ளார்.
அச்சிறுமி வீடு திரும்பியபோது அழுதுகொண்டே சென்றுள்ளாள். அப்போது, பெற்றோர் சிறுமியை விசாரிக்க, அவள் அழுதுகொண்டே நடந்தவற்றை கூறியுள்ளாள்.
உடனே, இது குறித்து காவல்நிலையத்திற்கு அச்சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். புகாரை உடனே பதிவு செய்த போலீசார் ஜாபரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.