முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க பணியில் ஈடுபட்ட வாகனம் விபத்து - ஒருவர் பரிதாப பலி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் உள்ள தனது மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டிற்கு இன்று மதியம் வருகிறார்.
இந்நிலையில், அவரை வரவேற்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்ட திமுகவினர் வழி நெடுகிலும் திமுக கொடி கம்பத்தை நட்டு வருகின்றனர். இதனையடுத்து, சீர்காழி அருகே சூரக்காடு என்னும் இடத்தில் கொடிக் கம்பம் நடும் பணியில் ஈடுபட்ட மினி லோடு வேன், மரத்தில் மோதியதில், சேலத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்த 3 பேரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.