சென்னையில் பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்தது!
tamilnadu-samugam
By Nandhini
சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.101.06 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து ரூ.94.06க்கு விற்பனையாகிறது.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளின் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என்றும், இதனால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் என்றும் அரசியல் கட்சிகளும் மத்திய, மாநில அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.