அமெரிக்காவிலிருந்து நாளை சென்னை வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்!
சிறுநீரக பிரச்சினையால் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனையடுத்து, அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல்நிலையை பரிசோதித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்ததால் அவரால் அமெரிக்காவுக்கு செல்லமுடியாமல் தவித்து வந்தார். இதனையடுத்து, பரிசோதனை செய்ய அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை வைத்தார்.
இவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்ல அனுமதி கொடுத்தது. அதன் படி, தனது குடும்பத்தினருடன் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர், மயோ கிளினிக்கிலிருந்து ரஜினிகாந்த் தனது மகளுடன் வெளியே நடந்து வருவது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலானது. அந்த
புகைப்படத்தை தவிர, ரஜினி உடல்நலம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. அவரது ரசிகர்கள் கேள்விக்கு மேல் கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இதையடுத்து ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து விளக்கமளித்த கவிஞர் வைரமுத்து, ரஜினிகாந்துக்கு மருத்துவ பரிசோதனை நல்லபடியாக முடிந்துள்ளதாகவும், என் செல்போனுக்கு அவரே அழைத்து தகவல் சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனை முடிந்ததால் ரஜினிகாந்த் நாளை சென்னை திரும்ப உள்ளார்.