அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு

tamilnadu-samugam
By Nandhini Jul 07, 2021 05:12 AM GMT
Report

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடோடிகள் படத்தில் நடித்த நடிகை சாந்தினி, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

மணிகண்டன் திருமணம் செய்து கொள்வதாக கூறி 5 ஆண்டுகள் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவரால் 3 முறை கருவுற்று கருக்கலைப்பு செய்துள்ளதாகவும் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அடித்து காயம் ஏற்படுதல், நம்பிக்கை மோசடி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், நடிகையை ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். பாஸ்போர்ட்டை, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க மணிகண்டனுக்கு ஐகோர்ட் நிபந்தனை விதித்துள்ளது. 2 வாரங்களுக்கு காவல்துறை முன்பு, தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று மணிகண்டனுக்கு ஐகோர்ட் ஆணை பிறப்பித்திருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன்! உயர்நீதிமன்றம் உத்தரவு | Tamilnadu Samugam