மூச்சுத்திணறி உயிருக்கு துடிதுடித்த சிறுமியை ஈவு இரக்கமின்றி கெடுத்து கொடூரமாக கொலை செய்த இளைஞன்!
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்து, வாழைத்தார் கட்டும் கயிற்றில் கட்டி தொங்கவிட்டு நாடகமாடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீசில் அந்த இளைஞன் கொடுத்த வாக்குமூலம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அர்ஜூன் (29).
இவர் தேயிலை தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். கடந்த மாதம் 30ம் தேதி நடந்த சிறுமியின் கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அர்ஜுன் வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தேயிலை தோட்டத்தொழிலாளிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு மூன்று வயதானது முதல், குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற பின்னர் அவர்கள் வீட்டிற்குள் சென்று மிட்டாய், பிஸ்கட் வாங்கிக்கொடுத்து குழந்தையை கொஞ்சுவது மாதிரி சில்மிஷம் செய்து வந்துள்ளார் அர்ஜூன்.
அந்த குழந்தைக்கு தற்போது 6 வயதானது. இந்நிலையில், குழந்தையின் தந்தை வேலைக்கு சென்ற சமயம் பார்த்து வீட்டிற்குச் சென்று மிட்டாய், இனிப்புகள் வாங்கிக்கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார் அர்ஜுன். கடந்த 30ம் தேதி அன்று அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தபோது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
சிறுமி இறந்தவிட்டதாக நினைத்த அர்ஜுன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது போல் செட்டப் செய்யலாம் என்று நினைத்து வாழைத்தார் கட்டி தொங்கவிடப்படும் கயிற்றில் கட்டி தொங்கவிட்டிருக்கிறார்.
தூக்கு கயிறு கழுத்தை இறுக்கவும், மயக்கம் தெளிந்த சிறுமி, மூச்சுத்திணறலால் கை,கால்களை போட்டு அசைத்து துடித்து உயிருக்கு போராடியுள்ளார். துடிதுடித்து உயிர் இழக்கும் வரைக்கும் பார்த்து நின்றுவிட்டு, உயிரிழந்த பின்னர் கதவை உள்பக்கமாக தாழிட்டுவிட்டு, ஜன்னல் வழியாக தப்பித்துள்ளான் அர்ஜூன்.
இத்தனையும் செய்துவிட்டு சிறுமியின் இறுதிச்சடங்கில் ஒன்றுமே தெரியாதது போல் சோகமாக பங்கேற்றுள்ளான் அர்ஜூன். 6 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்துகொள்வது எல்லாம் சாத்தியமில்லை கிடையாது என்பதால் போலீசார் இது தற்கொலை அல்ல கொலை என்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலையை செய்த கொலையாளியை தேடி வந்தனர். சிறுமியின் உடற்கூரு ஆய்விலும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி என்பதால் அக்கம் பக்கத்தினரால்தான் அசம்பாவிதம் நடந்திருக்கக்கூடும் என்று சிறுமியின் அருகில் இருக்கும் வீட்டாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அர்ஜூனுக்கு ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கம் இருப்பது தெரிய வந்துள்ளது.
அர்ஜுன் தனது செல்போனில் ஏராளமான ஆபாச படங்களை டவுன்லோட் செய்வது எந்த நேரமும் அதை பார்த்து வந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனால் போலீசார்கள் அவர் மீது சந்தேகமடைந்தனர்.
அவரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று துருவித் துருவி விசாரித்ததில் தான் செய்தது எல்லாம் ஒப்புக் கொண்டார் அர்ஜூன்.
6 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து துடிதுடிக்க கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.