1 மணி நேரமாக அம்மன் சிலை மீது படமெடுத்து ஆடிய நாகம்! ஆச்சரியத்தில் மூழ்கிய பக்தர்கள்!
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே அம்மன் சிலை மீது நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியதை பார்த்து பக்தர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள வேலம்பட்டியில் வேங்கானூர் செல்லும் சாலையில் பொன்னியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோயிலில் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம். இந்நிலையில், கடந்த திங்கள் கிழமை மாலை கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது திடீரென நாகப்பாம்பு ஒன்று ஏறியது. இதைக் கண்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள், சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அம்மன் சிலை மீது பாம்பு ஏறிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் திரண்டனர். அம்மன் சிலை மீது ஏறிய அந்த நாக பாம்பு சுமார் 1 மணி நேரமாக சிலையிலேயே படமெடுத்து ஆடியபடி இருந்தது.
இதனை பொதுமக்கள் பக்தி பரவசத்துடன் பார்த்தார்கள். பின்னர், அந்த பாம்பு சிலையில் இருந்து இறங்கி புதரில் சென்று மறைந்து விட்டது.
இதனை தொடர்ந்து, பொன்னியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இதனிடையே, பாம்பு அம்மன் சிலையில் ஏறிய காட்சியை ஏராளமானோர் தங்களுடைய செல்போனில் படம் எடுத்து, சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர்.
இந்த இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.