மனைவி வர மறுத்ததால் மச்சினியை கூட்டிச் சென்ற மாமன் - சிறிது நேரத்தில் நடந்த சோகச் சம்பவம்!
சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகள் சரண்யா. இவருடைய சகோதரி மஞ்சு. சரண்யா தன் கணவர் கார்த்திக்குடன் ஏற்பட்ட தகராறில் அவரை பிரிந்து பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வருகிறார்.
பல முறை மனைவியை சமாதானம் பேசி அழைத்துச் செல்ல வந்த கார்த்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
சரண்யாவை வீட்டிற்கு அழைத்து செல்வதுமுடியாத காரியம் என்று தெரிந்த கார்த்திக், 20 வயதான மஞ்சுவை வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் கொளத்தூர் திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள வீட்டிற்கு கூட்டிச் சென்றிருக்கிறார்.
கார்த்திக் வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திலேயே, மஞ்சு தூக்கில் பிணமாக தொங்கி விட்டதாக தகவல் வந்துள்ளது.
இதனையடுத்து, என் தங்கை தூக்கில் தொங்கவில்லை. கணவர் மற்றம் குடும்பத்தினர் தான் அடித்துக் கொலை செய்து விட்டனர் என்று கார்த்திக்கின் மனைவி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.