ஒன்றைரை வயது கேரள குழந்தைக்காக 7 நாளில் ரூ.18 கோடி குவிந்தது - மறையாத மனிதநேயத்தின் உச்சம்!
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரபிக். இவருடைய மனைவி மரியும்மா. இவர்களுக்கு பிறந்த முஹம்மது என்ற ஒன்றரை வயது குழந்தைக்கு முதுகெலும்பு தசைநார் சிதைவு நோய்யால் பாதிக்கப்பட்டது.
முஹம்மதுவின் மூத்த சகோதரிக்கு அப்ராவும் ( 15), இதே பாதிப்பினால் சிகிச்சை பெற வழியில்லாமல் சக்கர நாற்காலியில் உட்கார வேண்டிய நிலை உள்ளார். இந்நிலையில், முகம்மதுவை இந்த நோயிலிருந்து எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்துள்ளனர்.
இதனையடுத்து, ஒன்றரை வயதாகும் முஹம்மதுக்கு இரண்டு வயது ஆவதற்குள் அவருக்கு உயர்ந்த மருந்து ஒன்றை கொடுத்தால் குணப்படுத்தி விடலாம் என்று மருத்துவர்கள் சொல்லி உள்ளனர்.
இதனையடுத்து, அந்த உயர்ந்த மருந்து உலகிலேயே மிக விலை உயர்ந்த மருந்து என்றும், ஸோல்ஜென்ஸ்மா எனும் அந்த மருந்தின் விலை 18 கோடி என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். அத்தனை கோடிக்கு எங்கே போவது என்று புலம்பிய பெற்றோர்கள் பற்றிய நிலைமை ஒரு தொண்டு நிறுவனம் அறிந்தது. அந்த பெற்றோர்களுக்கு உதவி செய்ய முன் வந்தது.
அந்த நிறுவனம் அறிவித்ததன் பெயரில் ஏழு நாட்களுக்குள் அந்த மருந்து வாங்குவதற்கான 18 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. அவர்கள் குறிப்பிட்டிருந்த வங்கி கணக்கில் 18 கோடிக்கும் அதிகமாகவே வரவு வந்திருந்தது.
அதனால் இனிமேல் யாரும் இந்த வங்கி கணக்கில் பணம் செலுத்த வேண்டாம் சிகிச்சைக்கான பணத்தை திரட்டி விட்டோம் என்று அந்த அமைப்பு அறிவித்துள்ளது. 7 நாட்களுக்குள் ரூ.18 கோடி குவிந்ததால் குழந்தையின் பெற்றோர்கள் அளவில்லாத மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. மனித நேயத்தை எண்ணி பலரும் வியந்து போற்றி வருகிறார்கள்.