அண்ணன் வாங்கிய கடனுக்கு தம்பிக்கு நேர்ந்த கொடூரம்! அதிர்ச்சி சம்பவம்!
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவர் கந்து வட்டி தொழில் செய்து வருகிறார். இவரிடம் காயம்பட்டைச் சேர்ந்த தையல் தொழில் செய்து வந்த முனியப்பன் என்பவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு ரூ.1 லட்சம் கந்து வட்டி வாங்கியுள்ளார்.
கொரானா காலத்தில் வேலை இல்லாததால் வாங்கிய பணத்தை திருப்பி தர முடியாமல் தத்தளித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் திருப்பூருக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், முனியப்பன் தம்பியான சத்தியமூர்த்தியை கந்துவட்டி தொழில் செய்யும் பாக்யராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளான சிரஞ்சீவி, வரதராஜன், ராஜ் ஆகிய 4 பேரும் வனப்பகுதியை ஒட்டியுள்ள பண்ணை வீட்டில் கட்டி வைத்து கத்தியை காட்டி மிரட்டி வாங்கிய ஒரு லட்ச ரூபாய்க்கு 3 லட்சம் ரூபாய் வட்டி முதலுமாய் கொடுக்க வேண்டும் என்று சித்ரவதை செய்துள்ளனர்.
பின்னர் கூலிப்படையினர் சத்தியமூர்த்தி மனைவிக்கு போன் செய்து பணம் கொடுக்கவில்லையென்றால் உன் கணவனை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து ராணி செங்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அடைத்து சித்ரவதை செய்த சத்தியமூர்த்தியை மீட்டனர்.
மேலும், ஆள்கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாக்யராஜ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.