வீரப்பனுக்கு ஆயுதம் கடத்தியதே நாங்க தான் - போலீசாருடன் தகராறு செய்த இளைஞர்களால் பரபரப்பு!
கோவை கருமத்தம்பட்டியில் இன்று காலை மது அருந்திவிட்டு 2 இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டிருந்தனர். இதனை கேட்டப்பட்ட போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்றார்கள்.
காவல்நிலையத்தில், போதையில் இருவரும் ரகளை செய்தனர். திடீரென அவர்கள் காவல் நிலையத்திலிருந்து தப்பியோட முயற்சி செய்தனர். இதனால் அவர்கள் இருவரையும் காவல் ஆய்வாளர் சண்முகம் மடக்கிப்பிடித்து எச்சரிக்கை செய்தார்.
அப்போது, நாங்கள் என்ன திருடர்களா? சந்தன கடத்தல் வீரப்பனுக்கு ஆயுதங்களை கடத்தியதே தாங்கள் தான் என்று கூறி போலீசாருக்கு மிரட்டல் விடுத்தனர்.
இதனையடுத்து, 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, இருவரையும் போலீசார் கோவை அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், தகராறில் ஈடுபட்டவர்கள் கிட்டாம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், மணிகண்டன் என்பது தெரிய வந்தது. இவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.