19 வயது பெண்ணை துடிக்க துடிக்க 7 பேர் சேர்ந்து கற்பழிப்பு - பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!
ராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அருகே 19 வயது இளம்பெண்ணை காதலன் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் சேர்ந்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசையில் உள்ள ஒரு தனியார் மீன் கம்பெனியில் 19 வயது பெண் வேலை பார்த்து வந்தார். இவருக்கு, அந்த நிறுவனத்தில் வேலை பார்த்த 25 வயது இளைஞருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது.
இந்நிலையில், அந்த இளைஞர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், அதனை செல்போனில் படம் பிடித்தும் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, இந்த புகைப்படங்களை அவருடைய நண்பர்களுக்கு காட்டியுள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடம் தனது நண்பர்கள் 6 பேருடன் உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதற்கு அப்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். நீ மறுப்பு தெரிவித்தால், உன் ஆபாச புகைப்படங்களை வெளியில் விட்டுவிடுவேன் என்று மிரட்டி நண்பர்களின் இச்சைக்கு இணங்க வைத்துள்ளார்.
இந்த சூழலில், அந்த பெண் கர்ப்பமடைந்துள்ளார். தனக்கு நேர்ந்த கொடுமையை தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த தாயார், உச்சிப்புளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கூட்டு பாலியல் வன்கொடுமை என்பது தெரிய வந்துள்ளது. இந்த வழக்கு ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்திற்கு தற்போது மாற்றப்பட்டது.
தொடர்ந்து, வழக்கில் தொடர்புடைய 3 நபர்களை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.