வேளாங்கண்ணிக்கு ஒரு ஸ்வீட் ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! நெகிழ்ச்சி சம்பவம்

tamilnadu-samugam
By Nandhini Jul 06, 2021 10:05 AM GMT
Report

பதவி ஏற்ற நாளிலிருந்து தொகுதிக்குள் அதிரடியாக வந்து தீவிரமாக செயலாற்றி வருகிறார் உதயநிதி ஸ்டாலின். பம்பரமாக சுழன்று சேப்பாக்கத்தை வட்டமடித்து கொண்டிருக்கிறார். ஒரு எம்.எல்.ஏ. இப்படிதான் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறார் உதயநிதி.

தற்போது, உதயநிதி ஸ்டாலின் குறித்த ஒரு செய்தி சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அமைப்பாளர் வேளாங்கண்ணி. இவரது கணவருக்கு உடம்பு சரியில்லாதவர். கணவருக்கு இருதய நோய் உள்ளது.

அதனால் சிகிச்சை முடிந்து வீட்டில் உள்ளார்.  இவரை சென்று நலம் விசாரித்து வரும்படி, திமுக தலைமை உதயநிதியிடம் கேட்டுக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அதனால், வேளாங்கண்ணி வீட்டுக்கு சென்றுள்ளார் உதயநிதி. அங்கு போன உதயநிதி ஸ்டாலினுக்கு ஷாக் மேல ஷாக்கானது.

ன்ன காரணம் என்றால், வேளாங்கண்ணியின் வீடு ஒரு குடிசை வீடு. அந்த வீட்டுக்குள் நுழைந்ததுமே உதயநிதி வீட்டை சுற்றிப் பார்த்தார்.

கட்சியில் இத்தனை வருஷம் பாடுபட்டு உழைத்த மகளிர் அணி அமைப்பாளர் இப்படிப்பட்ட வீட்டில் தங்கி உள்ளாரா? என்ற வியப்புடன் பார்த்தார்.

உதயநிதியை வீட்டில் உட்கார வைத்தார் வேளாங்கண்ணி. அங்கிருந்த வேளாங்கண்ணியின் கணவரிடம் உடல்நிலை குறித்து உதயநிதி விசாரித்தார்.

பிறகு, வீட்டில் மாட்டியிருந்த சில போட்டோக்களை உதயநிதிக்கு காண்பித்தார் வேளாங்கண்ணி. சுவரில் நிறைய போட்டோக்கள் இருந்தது. ஒவ்வொன்றையும் பார்த்து கொண்டே வந்த உதயநிதி ஒரு போட்டோவை பார்த்து ஷாக்கானார்.

அந்த போட்டோவில் கலைஞர் கருணாநிதி, வேளாங்கண்ணிக்கு கல்யாணம் செய்து வைத்துள்ளார். அவர் தலைமையில்தான் திருமணம் நடந்த போட்டோவை பார்த்து வியந்தார் உதயநிதி.

பின்னர், வேளாங்கண்ணியிடம் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "உங்களுக்கு என்ன உதவியா இருந்தாலும் உடனே எனக்கு சொல்லுங்க.. தயங்காமல் கேளுங்க.. செய்து தருகிறேன். உங்களை காப்பது எங்கள் கடமை" என்றாராம். 

வேளாங்கண்ணிக்கு ஒரு ஸ்வீட் ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! நெகிழ்ச்சி சம்பவம் | Tamilnadu Samugam

வேளாங்கண்ணிக்கு ஒரு ஸ்வீட் ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! நெகிழ்ச்சி சம்பவம் | Tamilnadu Samugam

வேளாங்கண்ணிக்கு ஒரு ஸ்வீட் ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்! நெகிழ்ச்சி சம்பவம் | Tamilnadu Samugam