திருமணமானால் பிரிந்து விடுவோம்! இணைபிரியாத இரட்டை சகோதரிகள் செய்த காரியம்! அதிர்ச்சியில் குடும்பம்
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி யசோதா. இவர்களுக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற இரு மகள்கள் உள்ளனர். இவர்கள் இரண்டு பேரும் இரட்டை சகோதரிகள்.
இதனால், சிறு வயதிலிருந்து இருவரும் ஒருவருக்கு ஒருவர் அதீத அன்பு செலுத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் வீட்டில் முடிவு செய்தனர். இதற்காக அவர்கள் இருவருக்கும் வரன் தேடி வந்துள்ளனர். ஆனால், இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. திருமணம் செய்தால் இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்று விடுவோம் என இருவரும் கருதி மனம் வருந்தினர்.
திருமணமாகி தனித்தனியாக செல்வதை காட்டிலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளனர். அதனையடுத்து, நேற்று முன்தினம் இரவு இருவரும் தனித்தனி அறைகளில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், திருமணம் செய்து கொண்டால், இருவரும் தனித்தனியாக பிரிந்துவிடுவோம் என கருதிய தீபிகாவும், திவ்யாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.