கொழுந்தனார் மீது இருந்த மோகத்தால் 8 வயது மகனை கொடூரமாக கொலை செய்த தாய்!
குஜராத்தின் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் ஜகதீஷ் படேல். இவருடைய மனைவி ஜோஸ்னா படேல். இவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளார். இவர்களுடன் அவரின் மைத்துனர் ரமேஷ் படேலும் தங்கி வசித்து வந்தார்.
இந்நிலையில், ஜோஸ்னாவுக்கும், மைத்துனர் ரமேஷுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
இவர்களின் கள்ள உறவு அவரின் 8 வயதான மகன் ஹார்டாவுக்கு தெரிந்து விட்டது. அதனால், அச்சிறுவன் எங்கே தந்தையிடம் கூறிவிடுவானோ என்று பயந்து, இருவரும் கடந்த 2018ம் ஆண்டு சிறுவனை கொலை செய்து அங்குள்ள நிலத்தில் புதைத்து விட்டனர்.
இதனையடுத்து, மகனை காணவில்லை என்று போலீசில் கணவருடன் சென்று புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த கொலை பற்றி அப்போது போலீசாருக்கு எந்தவிதமான துப்பும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த கொலையை பற்றி போலீசாருக்கு சில துப்பு கிடைத்தது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அச்சிறுவனை அவரின் தாயும் மற்றும் உறவினர் இருவரும் சேர்ந்து கொலை செய்ததை கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவர்கள் இருவரையும் போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.