கணவரை விவகாரத்து செய்து மாமனாரை திருமணம் செய்து கொண்ட பெண் - அதிர்ச்சியில் குடும்பத்தினர்!
உத்தரப்பிரதேச மாநிலம், பவுடன் என்னும் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கடந்த 2016ம் ஆண்டு பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்தார். திருமணம் ஆன பிறகு இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.
இதனையடுத்து, திருமணம் முடிந்த 6 மாதத்தில் இவர்கள் இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில், அந்த இளைஞரின் தந்தை திடீரென்று காணமல் போனார். அந்த இளைஞர் இது குறித்து மகன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரை பதிவு செய்த போலீசார் தந்தையை தேடி வந்தனர்.
போலீசார் விசாரணையில், அந்த இளைஞரின் தந்தையும், விவாகரத்து பெற்ற அந்த மனைவியும் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து, போலீசார் அவர்கள் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இருவரிடையும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, அந்த பெண், ‘தான் தன்னுடைய இரண்டாவது கணவரான மாமனாருடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன். அவருடனே வாழ ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டதும், இரு குடும்பத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அதன் பின், இது தொடர்பாக மேலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.