ஊரே வேடிக்கை பார்க்க 2 பெண்களை அடித்து, மிதித்து கொடுமைப்படுத்திய குடும்பத்தினர்! நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

tamilnadu-samugam
By Nandhini Jul 05, 2021 04:12 AM GMT
Report

இந்தியாவில் 2 இளம் பெண்கள் தங்கள் குடும்பத்தினரால் கொடுரமாக அடித்து, மிதித்து, பிடித்து இழுத்து கொடுமைப்படுத்திய வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் பரவி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில், ஒரு பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தங்கள் தாய்மாமனின் மகன்களுடன் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

இதனால், இவர்கள் இருவரையும் ஆற்றங்கரையில் வைத்து அவர்களது குடும்பத்தினர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த கொடூரமான வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வெளிவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாய் உட்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து டண்டா காவல் நிலைய அதிகாரி கூறுகையில், இந்த ச.ம்.பவம் கடந்த ஜூன் 22ம் தேதி தார் மாவட்டத்தில் பிபால்வா என்ற கிராமத்தில் நடந்துள்ளது.

ஆனால், இதன் வீடியோ இணையத்தில் வைரலாக்கப்பட்ட பிறகே ஜூன் 25-ம் தேதி காவல் துறைக்கு தெரியவந்தது. பாதிக்கப்பட்ட இரு பெண்கள் முதலில் புகார் கொடுக்க மிகவும் பயந்தனர்.

பிறகு, அந்த பெண்களில் ஒருவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு அவரது அறிக்கையை பதிவு செய்தோம். பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு செய்யப்பட்டுள்ளது. இரு பெண்களும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார்.     

ஊரே வேடிக்கை பார்க்க 2 பெண்களை அடித்து, மிதித்து கொடுமைப்படுத்திய குடும்பத்தினர்! நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ! | Tamilnadu Samugam