மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை - வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!
கடந்த சில வாரங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. தமிழகம் உள்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் விலை 100ஐ கடந்துள்ளது.
டீசல் விலையும் ராஜஸ்தான் உள்ளிட்ட சில இடங்களில் ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை நிச்சயமாக உயரும் என்பதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வை அரசு உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளது. இதனையடுத்து, சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 100.44 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 93.91 ரூபாய்க்கும் விற்பனையானது.
இன்று பெட்ரோல் லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து 100.75க்கும், டீசல் விலை மாற்றம் இல்லாமல் 93.91 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.