கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்த இளம்பெண்ணை அலற அலற தீ வைத்து எரித்த கொடூர மனைவி!

tamilnadu-samugam
By Nandhini Jul 05, 2021 03:46 AM GMT
Report

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் கட்டிட தொழிலாளி. இவரது மனைவி ஞானசுந்தரி (32). இவர்களுக்கு குழந்தை கிடையாது. இந்நிலையில், செல்வராஜுக்கு உடன் பணிபுரியும் நிஷா (30) என்பவருடன் நட்பு ஏற்பட்டது.

இந்த நட்பு நாளடைவில் கள்ளக் காதலாக மாறியது. நிஷா கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்ததால், செல்வராஜ் அடிக்கடி நிஷாவை பார்ப்பது அவரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனையடுத்து, கடந்த 2 நாட்களாக செல்வராஜ் நிஷாவின் வீட்டிற்கு செல்லவில்லை. மேலும், செல்போனில் தொடர்பு கொண்டும் அழைப்பை ஏற்கவில்லை என கூறப்படுகிறது. இதனால், செல்வராஜை தேடி அவரது வீட்டிற்கே நிஷா சென்றுள்ளார். தன்னுடன் வாழ வரும்படி அழைத்திருக்கிறார். இதனால், ஞானசுந்தரிக்கும், நிஷாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இரண்டு பேரும் அடித்துக் கொண்டனர்.

இதில், ஆத்திரமடைந்த ஞானசுந்தரி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து நிஷா மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில், நிஷாவின் உடல் முழுவதும் தீப்பற்றியதால் அவர் அலறி துடித்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து நிஷாவை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, நிஷாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து, குமரலிங்கம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்திய போலீசார் ஞான சுந்தரி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

கணவருடன் கள்ளத்தொடர்பு வைத்த இளம்பெண்ணை அலற அலற தீ வைத்து எரித்த கொடூர மனைவி! | Tamilnadu Samugam