திருமணமான 2வது நாளில் கணவனுக்கு மனைவி கொடுத்த பேரதிர்ச்சி! சிலையாக நின்ற பரிதாபம் !
சிதம்பரம் அடுத்த நத்தமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகள் மணிமேகலை (27). பி.எஸ்சி. நர்சிங் படித்து முடித்துள்ளார். இதனையடுத்து, இவர் சென்னையில் உள்ள ஒரு கண் கண்ணாடி கடையில் கண் பரிசோதனை செய்யும் பிரிவில் வேலைபார்த்து வந்தார்.
இந்நிலையில் மணிமேகலைக்கும், குப்புசாமி என்பவருக்கும் இரு தினங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. நேற்று காலை மணிமேகலை, கணவர் மற்றும் உறவினர்களுடன் பண்ருட்டியிலிருந்து, தாய் வீட்டான மருதுார் நத்தமேட்டிற்கு வந்தார். மாலை பண்ருட்டிக்கு புறப்பட்டனர்.
அப்போது மணிமேகலை புடவை மாற்றி வருவதாக அறைக்குள் சென்றவர் நீண்ட நேரமாகியும் வரவே இல்லை. சந்தேகம் அடைந்த குப்புசாமி கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது மின் விசிறியில் மணிமேகலை தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்து குப்புசாமி உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று மணிமேகலை இறக்கினர்.
இதைக் கண்டதும் கு.ப்புசாமி சிலை போல அசைவற்று நின்றார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் மணிமேகலையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.