19 வயது பெண்ணை மரத்தில் தொங்க விட்டு கொடூரமாக தாக்கிய குடும்பத்தினர்! பதற வைக்கும் வீடியோ

tamilnadu-samugam
By Nandhini Jul 04, 2021 07:35 AM GMT
Report

இந்தியாவில் திருமணமான 19 வயது இளம்பெண்ணை குடும்பத்தினரே மரத்தில் தொங்கவிட்டு கொடூரமாக தாக்கிய வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் அதிவேகமாக பரவி வருகிறது.

மத்திய பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் பழங்குடியினர் மக்கள் வசிக்கும் கிராமத்தில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. 3 மாதங்களுக்கு முன்பு திருமணமான 19 வயது பெண், கணவர் வீட்டிலிருந்து வெளியேறி உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த குடும்பத்தினர் அப்பெண்ணை மரத்தில் தொங்க விட்டு கம்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் கிராமத்தினர் அனைவரும், அப்பெண் அடி வாங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

தந்தையும், 3 சகோதரர்களும் வேறு சிலரும் சேர்ந்து ஈவு இரக்கமின்றி அப்பெண்ணை அடித்து சித்ரவதை செய்தது காண்போர் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்த போலீசார் இளம் பெண்ணை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். படுகாயம் அ.டைந்த அப்பெண் உயிருக்கு போராடி வருகிறார்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இத்தாக்குத.ல் தொடர்பான வீடியோக்கள் அடிப்படையில் பெண்ணின் தந்தை, சகோதரன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.