மருமகனை காதலித்த 50 வயது மாமியார்... பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

tamilnadu-samugam
By Nandhini Jul 04, 2021 07:24 AM GMT
Report

உத்திரபிரதேச மாநிலம், முஸாபர் நகரைச் சேர்ந்த 50 வயது பெண் தனது மருமகனுடன் காதல் வலையில் விழுந்துள்ளார்.

2 பேரக் குழந்தைகளுக்கு பாட்டியான அவர், தன்னை விட சரிபாதி வயதுள்ள மருமகனுடன் தொடர்பு வைத்து வந்துள்ளார்.

இந்த தகாத உறவுக்கு குடும்பத்தினரும், ஊரில் உள்ளவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால், காதல் மயக்கத்தில் இருந்த அந்த ஜோடி, கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டு, வேறு ஒரு பகுதியில் தனியாக வீடு வாடகை எடுத்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இவர்கள் இருவரும் நடந்த பிரச்சினையை மறந்து தங்களை ஊரிலும், வீட்டிலும் சேர்த்துக்கொள்வார்கள் என்று நினைத்து அவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

ஆனால், செய்துள்ள காரியத்தை மறக்க முடியாத குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள், அவர்களை கடுமையாக எதிர்த்தனர்.

அப்போது, இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும், ஆதலால் தங்களை வாழ விடுமாறு இருவரும் கெஞ்சியுள்ளனர். ஆனால், இதனை ஏற்றுக் கொள்ளாத குடும்பத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதனையடுத்து, விரைந்து வந்த போலீசார் பொது ஒழுக்கத்துக்கு அச்சுறுத்தலாக இவர்கள் நடந்து கொண்டுள்ளதால் இவர்கள் இருவர் மீது வழக்குப் பதிவு செய்து, மாமியாரையும் மருமகனையும் கைது செய்தனர். 

மருமகனை காதலித்த 50 வயது மாமியார்... பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்! | Tamilnadu Samugam