பள்ளி கழிவறைக்கு சென்று ஆசிரியை செய்த காரியம் - கதவை உடைத்து பார்த்த போது அதிர்ச்சி!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் புவனா பென் (34). இவர் அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவருக்கு சமீபத்தில்தான் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கிடைத்தது. இந்நிலையில், நேற்று காலை சிறிது சீக்கிரமாகவே புவனா பள்ளிக்கு வந்துள்ளார்.
பின்னர் பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு சென்றவர் வெகுநேரமாகியும் வெளியில் வரவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த சக ஆசிரியைகள் கழிவறைக்குச் சென்று கதவைத் தட்டினார்கள். ஆனால், கதவு திறக்கவில்லை.
இதனையடுத்து, கதவை உடைத்து திறந்த போது, அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். புவனா கழிவறை ஜன்னல் கம்பியில் தூக்கில் பிணமாக தொங்கியபடி கிடந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். புவனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணை மேற்கொண்டதில் புவனா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது என்பதை போலீசார் வெளியிடவில்லை.
இது குறித்து, புவனா குடும்பத்தார் கூறுகையில், புவனாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாகிறது. அவருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். சமீபகாலமாக புவனா மிகுந்த மனஅழுத்ததில் இருந்து வந்தார். இதுவே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறினார்கள்.
புவனா கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் என இன்னும் தெரியாத நிலையில் போலீசார் விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.