20 வயது பெண்ணை 3-வதாக திருமணம் செய்த 50 வயது ஆண் - தலையை துண்டாக வெட்டிக் கொன்ற கொடூரம்!
நெல்லையைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இவருக்கு 50 வயதாகிறது. இவருக்கு 2 மனைவிகளும், 2 குழந்தைகளும் உள்ளனர். இவர் மீது நெல்லை காவல் நிலையத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ராஜபாண்டியன் கார் திருடுவதற்கு துப்பு கொடுக்கும் பெண்ணாக இருந்தவள் சித்ரா (20). இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இந்நிலையில், ராஜபாண்டியன் சித்ராவை 3-வதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் தூத்துக்குடியில் ரகசியமாக குடித்தனம் நடத்தி வந்துள்ளார். இவர்கள் இருவரும் அக்கம், பக்கத்தினரிடம் அப்பா-மகன் என பொய் சொல்லி அங்கு வீடு கேட்டுள்ளனர். என் மகளுக்கு தாய் இல்லை என சொல்லி வீட்டு உரிமையாளரை நம்ப வைத்துள்ளனர்.
அதனையடுத்து, கார் வாங்கும் தொடர்பாக அடிக்கடி வீட்டுக்கு வந்த ராமர் (22) என்பவர் அடிக்கடிக்கு சித்ரா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர்.
நாளடைவில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் ராஜபாண்டிக்கு தெரியவந்தது. இதனையடுத்து, ராஜபாண்டி சித்ராவை குடிபோதையில் கடுமையாக தாக்கியுள்ளார். இதன் பின்னர், ராமரிடம் போனில் சித்ரா, ராஜபாண்டி உயிரோடு இருக்கும் வரை நாம் ஒன்றாக வாழ முடியாது என்று கூறி அழுதுள்ளார்.
இதனையடுத்து, ராமர், ராஜபாண்டியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், சித்ரா வீட்டிற்கு வந்த ராமர் மற்றும் அவருடைய நண்பர் சக்திவேல் ஆகியோர் சேர்ந்து ராஜபாண்டியை அருவாளால் தலையை துண்டாக வெட்டியுள்ளனர். ராஜபாண்டி தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர்.
இதன் பின்னர், ராஜபாண்டியின் உடலை அப்பகுதியில் உள்ள கல்குவாரி அருகில் உடம்பை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தக் கொலையைச் செய்த சித்ரா மற்றும் ராமரை போலீசார் கைது விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும், தலைமறைவான சக்திவேலை போலீசார் தேடி வருகின்றனர்.