தமிழகம் முழுவதும் ரூ.100ஐ கடந்த பெட்ரோல் விலை!
tamilnadu-samugam
By Nandhini
இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்து வருகின்றன.
இந்நிலையில், நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் 99.80 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால், இன்று பெட்ரோல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் 100.13 ரூபாய்க்கும், டீசல் விலை மாற்றம் ஏதும் இன்றி நேற்றைய விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
