ஆடைகள் களைந்த நிலையில் 10 அடி ஆழத்தில் 5 பெண்களின் சடலங்கள் மீட்பு! நடுங்க வைத்த சம்பவம்

tamilnadu-samugam
By Nandhini Jul 01, 2021 10:07 AM GMT
Report

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் மமதா (45). இவரின் மகள்கள் ரூபாலி (21), திவ்யா (14). இவர்களின் உறவினர்களின் 2 பெண்கள் என மொத்தம் 5 பெண்கள் கடந்த 13ம் தேதி மாயமானதாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் ரூபாலியுடன் சுரேந்திரா ராஜ்புத் என்பவர் தொடர்பில் இருந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, ராஜ்புத்திடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ராஜ்புத் விசாரணையில், முன்னுக்குப் பின் முரணமாக பேசியதால், போலீசாருக்கு ராஜ்புத் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதனையடுத்து, சுரேந்திரா ராஜ்புத், ரூபாலியின் மொபைல் அழைப்புகளை பரிசோதித்த போலீசார், ராஜ்புத்திடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். ராஜ்புத் சொன்ன விஷயங்கள் போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.

ராஜ்புத் குடியிருப்பு ஒன்றில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர். அப்போது, ரூபாலியை சுரேந்திரா ராஜ்புத் காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், வீட்டில் ரூபாலிக்கு வேறு இடத்தில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ரூபாலியும் ராஜ்புத்தை கைவிட்டு, திருமணத்திற்கு தயாரானார்.

பல முறை காதலியிடம் ராஜ்புத் கெஞ்சியும் அவர் ராஜ்புத்தை விட்டு விலகி சென்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ராஜ்புத் மொத்த குடும்பத்தையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று ராஜ்புத் ரூபாலியின் வீட்டிற்கு சென்று, அங்கிருந்தவர்களை கழுத்து நெரித்து கொலை செய்து விட்டு, 5 பேரின் உடல்களை வயக்காட்டில் 10 அடி ஆழத்தில் புதைத்துள்ளார்.

அவர்களின் உடைகளை களைத்து மொத்தமாக எரித்து விட்டு, சடலங்கள் மீது உப்பும் யூரியாவும் கொட்டி புதைத்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, வயக்காட்டில் 10 அடி ஆழத்தில் சடலங்களை போலீசார் மீட்டுள்ளனர். 5 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் 6 பேரை போலிசார் கைது செய்துள்ளனர். இவர்களுக்கு உதவிய இன்னும் பலர் சிக்கலாம் என்று போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆடைகள் களைந்த நிலையில் 10 அடி ஆழத்தில் 5 பெண்களின் சடலங்கள் மீட்பு! நடுங்க வைத்த சம்பவம் | Tamilnadu Samugam

ஆடைகள் களைந்த நிலையில் 10 அடி ஆழத்தில் 5 பெண்களின் சடலங்கள் மீட்பு! நடுங்க வைத்த சம்பவம் | Tamilnadu Samugam