65 வயது முதியவருக்கு 35 வயது பெண் மீது ஏற்பட்ட காதல் : காதலி மறுத்ததால் விரக்தியில் நடந்த விபரீதம்!

tamilnadu-samugam
By Nandhini Jul 01, 2021 09:37 AM GMT
Report

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் கவிதா (35). இவருடைய கணவருக்கு கை, கால் உடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், வருமானமின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், கவிதா குடும்ப வாழ்வாதாரத்திற்காக வீட்டுக்கு பக்கத்தில் கடந்த 2 மாதங்களாக காய்கறி, பழங்கள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார்.

கிண்டியைச் சேர்ந்த 65 வயதுடைய முருகன் என்பவர் தினமும் கவிதா விற்கும் காய்கறி, பழங்களை வாங்க வருவது வழக்கம்.

அப்போது, 65 வயதுடைய முதியவருக்கும் 35 வயதுடைய கவிதா மீது காதல் வந்துள்ளது. ஆனால், இவரின் காதலை கவிதா ஏற்க மறுத்துவிட்டார்.

பலமுறை காதலை கவிதாவிடம் சொல்ல கவிதா வீட்டிற்கே சென்றதாக கூறப்படுகிறது. இருந்தும் கவிதா, முதியவரின் காதலை ஏற்கவில்லை.

பல்வேறு யுக்திகளை கையாண்ட வயதான அந்த நபருக்கு கடைசிவரை ஏமாற்றமே மிஞ்சியதால் விரக்தியடைந்துள்ளார்.

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குடும்பமே முக்கியம் என கருதிய கவிதா முருகனுக்கு பயந்து காய்கறி, பழக்கடை போடுவதையே இரண்டு வாரங்களாக நிறுத்தி விட்டார்.

இரண்டு வாரங்களாக கவிதாவை பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்த முருகன் அவருடைய ஒருதலை காதலியின் வீட்டிற்கு சென்றார். கவிதா வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கவிதா வீட்டில் இல்லை.

இதனால் கடும் விரக்தியடைந்தார் முருகன். ஆத்திரத்தில் கவிதா வசிக்கும் வாடகை வீட்டிற்கு தீ வைத்து எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். முருகன் தொல்லையிலிருந்து தப்பிக்க கவிதா தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது, வீட்டின் உரிமையாளர் கவிதாவை தொடர்பு கொண்டு வீடு எரிந்து கொண்டிருப்பதாக தகவல் தெரிவித்தார்.

தகவலறிந்து வீட்டிற்கு வருவதற்குள் தீ வீடு முழுவதும் எரிந்து, வீட்டில் இருந்த எல்லா பொருட்களும் எரிந்து சாம்பலாகிவிட்டது. இது குறித்து காவல்நிலையத்தில் கவிதா புகார் கொடுத்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

65 வயது முதியவருக்கு 35 வயது பெண் மீது ஏற்பட்ட காதல் : காதலி மறுத்ததால் விரக்தியில் நடந்த விபரீதம்! | Tamilnadu Samugam