பெட்ரோல், டீசலை தொடர்ந்து சமையல் சிலிண்டர் விலையும் உயர்ந்தது! மக்கள் அதிர்ச்சி!
கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்திக்கொண்டு வருகின்றன. இதனால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் தற்போது உயர்ந்து வருகிறது. இது மக்களை பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளது. இந்நிலையில், இதைத் தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.825.50காசுகளில் இருந்து ரூ.850.50 காசுகளாக விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வு, நள்ளிரவு முதல் அமலுக்கு வந்திருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன்படி இன்று முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.850.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல், வணிக ரீதியான எரிவாயு சிலிண்டர் மீதும் ரூ.84.50 காசுகள் விலை உயர்ந்து சிலிண்டர் ரூ.1,687.50 காசுகளுக்கு விற்பனையாகி வருகிறது.