அடேங்கப்பா... தண்ணீரில் ஊற வைத்த துளசியை குடித்து வந்தால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? நீங்களே பாருங்கள்
இயற்கை தந்த படைப்புகளில் துளசி அற்புதமான ஒரு சிறந்த மருந்தாகும். துளசி பல்வேறு மருத்தவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இது மக்களுக்கு உடல்நல பயனை அள்ளித்தரும் ஒரு ஒப்பற்ற மூலிகையாக திகழ்கிறது.
வியாதி உள்ளவர்கள் தான் துளசி நீரை குடிக்க வேண்டும் என்று இல்லை. நல்ல ஆரோக்கியம் இருப்பவர்களும். தினமும் ஒரு டம்ளர் துளசி நீரை பருகலாம்.
எந்த நோயாக இருந்தாலும் கவலைப்படாமல் துளசிநீர் மட்டும் குடித்து வாருங்கள். அனைத்து நோய்களின் தாக்கமும் குறைந்து விடும்.
துளசியில் கிருமிகளை அழிக்க கூடிய ஆற்றல் உள்ளதால் இந்த துளசி நீரை குடிப்பதால் புதிய நோய் தொற்று ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
துளசி நீர்
சிறிதளவு சுத்தமான தண்ணீர் விட்டு ஒரு கை பிடியளவு துளசி இலையை எடுத்து நீரினுள் போட வேண்டும்.
இதை எட்டு மணிநேரம் மூடி வைக்க வேண்டும்.
பின்னர் துளசி நீரை வெறும் வயிற்றில் ஒரு டம்ளரோ அல்லது இரண்டு டம்ளரோ குடித்து வர வேண்டும்.
இவ்வாறு 48 நாட்கள் பருகினால் 448 வகையான நோய்கள் குணமாகும்.
சளித் தொல்லை நீங்க
துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும்.துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது.
வியர்வை நாற்றம்
அகல உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும்.
உடல் எடை குறைய
துளசி இலைச்சாறுடன் எலுமிச்சம் பழம் சேர்த்து சிறிது சூடாக்கி அதனுடன் தேன் கலந்து, உணவுக்குப்பின் உட்கொண்டால் உடல் எடை குறையும்.
சிறுநீரக கற்கள் கரைய
துளசி யூரிக் அமிலத்தின் அளவை குறைத்து சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதையும், அதை கரைக்கவும் உதவுகிறது.
புற்றுநோய் செல்களை அழிக்க
துளசியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை தடுக்க உதவுகிறது.
துளசி நீரின் பயன்கள்
-
உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் இருந்தாலும் துளசி நீர் அதனை முழுவதும் குணமாக்கும்.
துளசி கிருமி நாசினியாகவும் இருப்பதால் துளசி நீர் தினமும் குடிப்பதால் வாய் துர்நாற்றம் மறையும்.
துளசி நீரைத் தொடர்ந்து பருகினால் நீரழிவு நோய் நெருங்காது.