மகளிர் காவல் நிலையத்தில் அரை நிர்வாணமாக நுழைந்து ரகளை செய்த அரசு பேருந்து ஓட்டுநர் கைது!
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார்.
இவர் நாளை பணியில் சேர்வதற்காக வேப்பூரிலிருந்து உளுந்தூர்பேட்டைக்கு அரசு பேருந்தில் நன்றாக குடித்து விட்டு வந்துள்ளார். அப்பொழுது, அருண்குமாருக்கும், அவர் அந்த பேருந்தில் பயணம் செய்த பேருந்து நடத்துனருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்த வாக்குவாதத்தில் மது போதையில் இருந்த அருண்குமார் பேருந்தின் கண்ணாடியை உடைத்து விட்டார். இதனால், உளுந்தூர்பேட்டை மகளிர் காவல் நிலையம் அருகில் பேருந்தை நிறுத்தி அருண்குமாரை கீழே இறக்கி உள்ளனர்.
அப்போது, மதுபோதையில் இருந்த அருண்குமார், அரை நிர்வாணத்துடன் அருகிலிருந்த ம.களிர் காவல் நிலையத்திற்கு சென்று பெண் காவலர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.
பின்னர், காவல் நிலையத்தின் வாசலில் அமர்ந்து ரகளையும் செய்துள்ளார்.
இதுகுறித்து, உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வநாயகம் அங்கு விரைந்து வந்தார். அப்போது, மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட அருண்குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தார்.
