திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த இளம் பெண்ணை கதற கதற மைத்துனர்கள் செய்த வெறிச்செயல்!
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க பெண், உஸ்மன்பூர் பகுதியைச் சேர்ந்த நபரை கடந்த 22ம் தேதி திருமணம் செய்தார். திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த அந்த பெண்ணை, மாமியார் மற்றும் மைத்துனர்கள் வரதட்சனை கேட்டு கொடுமை செய்து வந்தனர்.
ஒரு கட்டத்தில், மைத்துனர்கள் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, அவரது தனிப்பட்ட பாகங்களில் சூடு வைத்து கொடுமை செய்துள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், குளிர்பானத்தில் விஷம் வைத்து கொடுத்து கொலை செய்யவும் முயற்சி செய்துள்ளனர்.
இதனால் அப்பெண் செய்வது அறியாது தன்னைக் காப்பாற்றிக் கொள்ள உடனடியாக இது குறித்து பெற்றோரிடம் போனில் தெரிவித்துள்ளார்.
அப்பெண்ணின் பெற்றோர்கள் உடனே காவல்நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் அப்பெண் இருக்கும் இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்தனர். மாமியார் மற்றும் மைத்துனர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
விசாரணையில், நடந்தது அனைத்தும் உண்மை என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மாமியார், மைத்துனர்கள் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண்ணை அவர்களிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தற்போது அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.