மாமியாரை துடிதுடிக்க பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொன்ற மருமகள்!
அதிர்ச்சி சம்பவம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் சுதாமணி (28). இவருக்கும், அந்த ஊரில் அடிக்கடி துணி வியாபாரம் செய்ய வந்த ஸ்ரீரங்கப்பாவுக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர். இது சுதாமணியின் மாமியார் சரோஜாம்மாவுக்கு (65) தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, சுதாமணியை சரோஜம்மாள் கண்டித்துள்ளார். ஆனாலும் மருமகள் கேட்காமல் தொடர்ந்து ஸ்ரீரங்கப்பாவுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
இதனால், மாமியார் கடுமையாக கண்டித்து எச்சரித்ததால் சுதாமணி ஆத்திரமடைந்தாள். மாமியார் உயிருடன் இருந்தால், சந்தோஷமாக இருக்க முடியாது என்று ஸ்ரீரங்கப்பாவிடம் பேசியிருக்கிறாள் சுதாமணி.
இதனால், மாமியாரை கொன்று விடலாம் என்று ஸ்ரீரங்கப்பாவிடம் சொல்லி இருக்கிறாள். இதனையடுத்து, கடந்த 24ம் தேதியன்று சரோஜம்மா மீது பெட்ரோலை ஊற்றி சுதாமணியும், ஸ்ரீரங்கப்பாவும் தீ வைத்துள்ளனர்.
இந்த தீயில் உடல் கருகி துடிதுடித்து பரிதாபமாக சரோஜாம்மாள் உயிரிழந்தார். இந்நிலையில், உடல்நிலை குறைவால் சரோஜம்மா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுவிட்டதாக நாடகமாடியுள்ளார் சுதாமணி. ஆனால் சரோஜாவின் மருமகன் பிரேம்குமார், அத்தையின் மரணத்தில் மர்மம் உள்ளதாகவும், அவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை, யாரோ பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்றிருப்பதாக போலீசிடம் சந்தேகம் தெரிவித்தார். இந்த புகாரை பதிவு செய்த போலீசார், மருமகள் சுதாமணியிடம் விசாரணை நடத்தினர்.
முதலில் அவர் இல்லை என்று மறுத்தவர், பின்னர் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் உண்மையை ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, சுதாமணியையும், அவரது கள்ளக்காதலனையும் போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதலுக்காக மாமியாரை துடிதுடிக்க உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.