இலங்கை தமிழர் முகாமில் கதற கதற பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரர்கள் 2 பேர் கைது!

tamilnadu-samugam
By Nandhini Jun 28, 2021 01:32 PM GMT
Report

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி இலங்கை அகதிகள் முகாம் பகுதியைச் சேர்ந்தவர் உதயன். இவரது மனைவி சங்கீதா, குடும்ப தகராறு காரணமாக இருவரும் பிரிந்து சங்கீதா தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 22ம் தேதி இரவு சங்கீதா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, உதயனின் நண்பர் காண்டிபன் குடிபோதையில் சங்கீதாவின் வீட்டு கதவைத் தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த சங்கீதாவை கதற கதற பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனையடுத்து, காண்டிபன் சங்கீதாவை பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து அவருடைய நண்பன் ஆண்ட்ரிஸ் என்பவரிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து, ஆண்ட்ரிஸ் கடந்த 23ம் தேதி இரவு சங்கீதா வீட்டுக்கு சென்று, சங்கீதாவை மிரட்டி துடிதுடிக்க பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை வெளியில் சொன்னால், உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, சங்கீதா இச்சம்பவம் குறித்து காரிமங்கலம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் துரைராஜ் வழக்குப்பதிவு செய்து, காண்டீபன், ஆண்ட்ரிஸ் ஆகியோரை கைது செய்து பாலக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். 

இலங்கை தமிழர் முகாமில் கதற கதற பெண்ணை பலாத்காரம் செய்த கொடூரர்கள் 2 பேர் கைது! | Tamilnadu Samugam