எனக்கு கறி தான் முக்கியம்… விருந்தில் மட்டன் இல்லாததால் திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை!
ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் ராமகாந்த் பத்ரா. இவருக்கு சுகிந்தா என்ற கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக தனது உறவினர்கள் முன்னிலையில், ராமகாந்த் பத்ரா மணமகள் வீட்டிற்கு சென்று சென்றார்.
அங்கு மணமகள் வீட்டார் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பிறகு, விழாவிற்கு வந்திருந்த அனைவருக்குமே இரவு விருந்து கொடுக்கப்பட்டது. ஆனால், விருந்தில் ஆட்டுக்கறி மட்டும் இல்லை. இதனையடுத்து, மாப்பிள்ளை வீட்டார் தகராறில் ஈடுபட்டனர்.
இதனால், இரு வீட்டாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், இது குறித்த தகவல் மணமகன் காதுக்குச் சென்றது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி வேறு ஒரு உறவினர் வீட்டில் தங்கிவிட்டார்.
இதனையடுத்து, மணமகன் ராமகாந்த் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். அதே இரவில் புல்ஜாராவைச் சேர்ந்த மற்றொரு பெண்ணை ராமகாந்த் மணந்துள்ளார்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.