மருமகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த மாமனார் : தந்தைக்கு மகனால் நேர்ந்த விபரீதம்!
ஓட்டபிடாரடிமைச் சேர்ந்தவர் தமிழழகன். இவரது மகன் காசிராஜன். தமிழழகன் தன்னுடைய மகனின் மனைவியை தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், அவ்வழக்கை வாபஸ் பெறக்கோரி தனது மகன் காசிராஜனிடம் தமிழழகன் தொந்தரவு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், தமிழழகன் தூத்துக்குடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காசிராஜன் காரை கொண்டு தந்தை ஓடிச்சென்ற இருசக்கர வாகனம் மீது இடித்துள்ளார்.
இதில் தந்தை பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
கொலை முயற்சி செய்ததாக வழக்கைப் பதிவு செய்த போலீசார் காசிராஜனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.