இன்னொரு மனைவியோடு முதலிரவை முடித்த மணமகன் - மறுநாள் காத்திருந்த பேரதிர்ச்சி!
மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு, அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தினை கொள்ளையடித்துச் சென்ற கூட்டத்தை போலீசார் கைது செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் சோனு. இவருடைய மனைவி கோமல். இவர்கள் இருவருக்கும் சீக்கிரமாக பணக்காரராக வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அப்பகுதியிலிருக்கும் சுமன் என்ற கல்யாண தரகரை அணுகினார்கள். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு திட்டம் ஒன்றை போட்டனர். அதன்படி, ரவி என்ற நபருக்கு, சோனுவின் மனைவியை கல்யாணம் ஆகாதவர் என்று கூறி, சோனுவை பெண்ணின் சகோதரர் என்று கூறி திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில், திருமணம் முடிந்த அன்று இரவு முதலிரவு முடிந்துள்ளது. மறுநாள் காலையில் எழுந்து பார்த்த ரவிக்கு பெரும் அதிர்ச்சி. கல்யாணமான பெண் வீட்டில் இல்லை. வீட்டைச் சுற்றி பார்த்தும், வெளியில் சென்று தேடியும் அப்பெண் இல்லை.
இதன் பின்பு, பெண்ணும், அவரது கணவரும், கல்யாண புரோக்கர் 3 பேர் சேர்ந்து, ரவி கொடுத்த ரூ. 2 லட்சத்தையும், நகைகளையும் எடுத்துக்கொண்டு தப்பி ஓடியது தெரியவந்தது. பின்பு இது குறித்து ரவி போலீசில் புகார் கொடுத்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.