கவச உடையை கழற்றி மருத்துவர் வெளியிட்ட நெஞ்சை நொறுக்கும் புகைப்படம்!
கொரோனா நோயாளிகள் நிரம்பி வழியும் கூட்டத்தால், மருத்துவமனையில் கவச உடையை அணிந்து கொண்டு மருத்துவம் பார்ப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல.
இந்நிலையில், கொரோனா பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு, ஒரு மருத்துவர் Shoil கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவிட்டு வெளியே வந்த பின்னர், நிலைமை எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு பலரும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை பார்க்கும்போது எங்கள் இதயம் நொறுங்கி விட்டதைப்போல உணர்கிறோம் என்றும், உங்களின் தியாகத்தை மதிப்பதாக இருந்தால் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே மருத்துவர்களுக்கு இதிலிருந்து விடுதலை கிடைக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.