மரப்பலகையில் தோனி எழுதிய வாசகம் செம்ம வைரல்!
tamilnadu-samugam
By Nandhini
பிரபல கிரிக்கெட் வீரர் தோனி தனது குடும்பத்தினருடன் இமாச்சலப் பிரதேசம் சிம்லாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அம்மாநிலத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டிருந்தது.
இதனால், அங்கு குடும்பத்தினருடன் தோனி நேரத்தை செலவிட்டு வருகிறார். மனைவி, மகள் மற்றும் குடும்பத்தினருடன் தோனி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அப்போது, தோனி அங்கிருந்த இடத்திலிருந்து கிளம்பும்போது மரப்பலகை ஒன்றில் ‘மரம் வளர்ப்போம், காடுகளை பாதுகாப்போம்’ என்று எழுதி விட்டு சென்றார்.
இந்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.