ஒரே மேடையில் அக்கா - தங்கை இருவரையும் மணம் முடித்த ஆண் - நெகிழ்ச்சி சம்பவம்!
கோலார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுப்ரியா. இவர் வாய் பேச முடியாதவர். இவரது தங்கை லலிதா. சுப்ரியா வாய் பேசாதவர் என்பதால் யாரும் அவளை திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை.
இந்நிலையில், லலிதாவுக்கும், உமாபதி என்பவருக்கும் கடந்த சில மாதத்திற்கு முன்பு திருமணம் பேசி நிச்சயம் செய்யப்பட்டது.
இவர்களது திருமணம் நேற்று நடைபெற இருந்தது. திருமண நடைபெறும் நேரத்தில் லலிதா, திருமணம் செய்து கொள்ளப்போகும் உமாபதியிடம் வந்து, என் அக்காவையும் சேர்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள்.
அவள் வாய் பேச முடியாதவள் என்பதால் யாரும் அவளை திருமணம் செய்து கொள்ள மாட்டாங்க... அதனால... நீங்கள் அவளை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று உருக்கமாக கூறியுள்ளார்.
சற்று யோசனை செய்த உமாபதி அக்கா திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில், நேற்று ஒரே மேடையில் உமாபதி, சுப்ரியா மற்றும் லலிதாவுக்கு தாலி காட்டினார். இத்திருமணத்திற்கு வந்தவர்கள் இத்தம்பதியை வாழ்த்திச் சென்றனர்.
இத்திருமணத்திற்கு வந்தவர்கள் இச்சம்பவத்தால் நெகிழ்ந்து போனார்கள்.