15 வயது மாணவி வயிற்றில் 1 கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டி அகற்றம்!
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வருவதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், மாணவர்களுக்கு மன சோர்வுடன், மன அழுத்தம் அதிகரித்து வருகிறது. வீட்டிலும் படிக்க முடியாத சூழலில் பல பிரச்சினைகளை மாணவ, மாணவிகள் சந்தித்து வருகிறார்கள்.
இந்நிலையில், விழுப்புரத்தில் 15 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு அரியவகை மனச்சோர்வு ஏற்பட்டுள்ளது. தன் தலைமுடியை பிய்த்து சாப்பிட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், தன் பாட்டியுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்
அந்த மாணவி. அப்போது, இந்த சிறுமிக்கு திடீரென வயிற்றுவலியும், வாந்தி ஏற்பட்டால், உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டாள். அங்கு அச்சிறுமிக்கு உடல் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, வயிற்றில் முடிகளால் ஆன கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கட்டி சிறுகுடல் வரை பரவி இருந்தது. இதனைத் தொடர்ந்து, மருத்துவர் மகேந்திரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் கடந்த வாரம் அறுவை சிகிச்சை செய்து அச்சிறுமியின் வயிற்றிலிருந்து சுமார் ஒரு கிலோ எடையுள்ள முடிகளால் ஆன கட்டியை அகற்றியுள்ளனர்.