இளைஞனை நேரில் வரச்சொல்லி உதவி செய்த எஸ்.பி!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த ஊரடங்கில், நடுத்தர குடும்பம் முதல் சாதாரண கூலித் தொழிலாளிகள் வரை வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருப்பத்தூரில் ஒரு இளைஞர் ஊரடங்கில் விதிமுறையை மீறி பெட்டிக்கடை வைத்து நடத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், எஸ்.பி. சிபிசக்கரவர்த்தி இச்சம்பவத்தை கேள்விப்பட்டு சம்பந்தப்பட்ட அந்த இளைஞரை நேரில் வரவழைத்து அவரின் பிர்சனைகளை கவனமுடன் கேட்டுள்ளார். அந்த இளைஞனின் குடும்ப சூழல் காரணமாக ஊரடங்கில் பெட்டிக்கடை வைத்து நடத்தினேன் என்று கூறியுள்ளார்.
மேலும், அந்த இளைஞர், தனது தந்தை ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்று கூறியுள்ளார். முழுமையாக விசாரித்த மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி அந்த இளைஞனரிடம் மனிதாபிமனத்துடன் என்ன தேவை என கேட்டுள்ளார்.
அந்த மாணவனுக்கு தேவையான கல்லூரி கட்டணம் முழுமையாக தனது சம்பளத்திலிருந்து செலுத்துவதாக கூறியதோடு, உடனடியாக அந்த தொகைக்கு தனது வங்கி கணக்கில் செக் போட்டு கொடுத்திருக்கிறார்.
அவரது தந்தைக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கும், அவர் உதவுவதாகவும் கூறி இனிமேல் இதுபோன்ற சட்ட விரோத செயலில் எக்காரணத்தைக் கொண்டும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சிபிசக்கரவர்த்தியின் இந்த செயல் பாராட்டுக்குரியது என சமூக நல அமைப்பை சேர்ந்தவர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.