சாலையோரத்தில் மாம்பழம் விற்ற சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

tamilnadu-samugam
By Nandhini Jun 28, 2021 06:21 AM GMT
Report

ஜார்க்கண்டைச் சேர்ந்தவர் துளசி குமாரி. இவர் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை ஸ்ரீமல் குமார். இவர் சாலையோரத்தில் பழங்களை விற்று வருகிறார்.

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால், ஆன்லைன் வழியாக பள்ளி ஆசிரியர்கள் பாடங்களை நடத்தி வருகின்றனர். துளசி குமாரியிடம் ஸ்மார்ட் போன் இல்லாததால் அவரால் ஆன்லைனில் வகுப்பில் படிக்க இயலவில்லை.

இதனால், பெண்ணுக்கு ஸ்மார்ட் போன் வாங்கி கொடுக்க குமாரிடம் வசதி கிடையாது. இதனால், துளசியால் படிக்க முடியவில்லை. இதனையடுத்து, துளசி தந்தைக்கு உதவியாக சாலையோரத்தில் மாம்பழங்களை விற்று வந்தாள்.

மும்பையை சேர்ந்த தொழிலதிபர் அமியா ஹீட்டே ஜம்ஷெட்பூர் சாலையில் செல்லும்போது, அப்போது, துளசி சாலையோரத்தில் மாம்பழங்களை விற்பதை பார்த்து அவளிடம் வந்து பேசினார். ‘ஏன் படிக்காமல் ரோட்டில் வியாபாரம் செய்கிறாய்’ என்று கேட்டுள்ளார். அதற்கு துளசி, ‘என்னிடம் செல்போன் இல்லை. அதனால் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியவில்லை’ என்றாள்.

சற்றும் யோசிக்காமல் அந்த தொழிலதிபர், உடனே துளசியிடம் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கு 12 மாம்பழங்களை வாங்கினார். துளசி தந்தையின் வங்கி கணக்குக்கு 1.2 லட்ச ரூபாயை உடனடியாக ஆன்லைன் வழியாக செலுத்தினார்.

அவளிடம் அந்த தொழிலதிபர், ‘இந்த பணத்தை வைத்து ஸ்மார்ட் போன் வாங்கி ஆன்லைனில் தொடர்ந்து படிக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். மேலும், ஒரு ஆண்டுக்கான இன்டர்நெட் இணைப்பு கட்டணத்தையும் துளசிக்கு ஹீட்டே வழங்கினார்.

தற்போது துளசியின் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. 

சாலையோரத்தில் மாம்பழம் விற்ற சிறுமிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! | Tamilnadu Samugam