ஓட, ஓட மனைவியை விரட்டி கதற கதற கத்தியால் குத்திக் கொன்ற கணவன் - நடந்த குற்றப் பின்னணி என்ன?
நெல்லையைச் சேர்ந்தவர் சுடலை. இவருக்கு 18 வயதில் ராமச்சந்திரன் என்ற மகன் உள்ளார். ராமச்சந்திரன் கூலித் தொழில் செய்து வருகிறார்.
இதனையடுத்து, அத்திமேடு பகுதியைச் சேர்ந்தவர் சேர்மதுரை. இவரது மனைவி கவிதா (25). கவிதாவுக்கும், ராமச்சந்திரனுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இந்த நட்பு காதலாக மாறியது. பல நாட்களாக யாருக்கும் தெரியாமல் இவர்கள் பழக்கம் வைத்து வந்துள்ளனர். அடிக்கடி இரண்டு பேரும் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இது குறித்த விஷயம் சேர்மதுரைக்கு தெரிய வந்தது. கவிதாவை பல முறை கண்டித்துள்ளார் சேர்மதுரை. திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு கவிதாவும், ராமச்சந்திரனும் தலைமறைவாகிவிட்டனர். இவர்கள் இருவரை தேடி வந்துள்ளார் சேர்மதுரை. இவர்கள் இருவரும் டவுன் ஸ்ரீராம் நகரில் தங்கியிருப்பது சேர்மதுரைக்கு தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று தன்னுடைய உறவினர்களுடன் சேர்மதுரை டவுன் ஸ்ரீராம் நகருக்கு சென்றார். அப்போது, டவுன் குற்றாலம் சாலை அருகே கவிதாவும், ராமச்சந்திரனும் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.
இதைக் கண்டு சேர்மதுரை வழிமறித்தார். இவர்கள் மூவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் தகராறு முற்றிப்போய் கைகலப்பானது.
கோபத்தின் உச்சிக்குச் சென்ற சேர்மதுரை மற்றும் உறவினர்கள் இவர்கள் இருவரையும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட ஓட விரட்டி குத்தினர்.
இருவரையும் சரமாரியாக குத்தியதில் அவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி அலறினர். இவர்களின் சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் ஓடி வர சேர்மதுரையும், உறவினர்களும் தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில், இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனில்லாமல் கவிதா உயிரிழந்தார்.
இந்த கொலை சம்பந்தமாக சேர்மதுரையையும், உறவினர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
