வயிற்றில் குழந்தை என நினைத்து சிகிச்சை - பின்னர் ஸ்கேனில் தெரிந்த உண்மை - அதிர்ந்து போன மருத்துவர்கள்!

tamilnadu-samugam
By Nandhini Jun 26, 2021 09:05 AM GMT
Report

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவர் கூலித்தொழிலாளி. இவரது மனைவி அஸ்வினி (22). இவர்கள் இருவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், அஸ்வினி கடந்த மார்ச் மாதம் கல்லாவியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று கர்ப்பம் பரிசோதனை செய்தார். பரிசோதனையில், அஸ்வினி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர் கூறினார்.

கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கப்படும் மருந்து, மாத்திரி, ஊசி என கொடுத்து சிகிச்சை அளித்துள்ளார் அந்த மருத்துவர். அஸ்வினி பெயரில் தனியாக தாய் மற்றும் சேய் நலக் காப்பகம் மூலம் அட்டை கொடுத்து அதில் வார வாரம் சிகிச்சையும் அளித்து வந்துள்ளார். இந்நிலையில், பரிசோதனைக்குச் சென்றபோது அஸ்வினி வயிற்று வலி அதிகமாக இருப்பதாக மருத்துவரிடம் கூறினார்.

இதனையடுத்து, மருத்துவர் ஸ்கேன் எடுத்து வருமாறு கூறியுள்ளார். ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் குழந்தை எதும் இல்லை என்றும், நீர்கட்டி இருப்பதும் தெரியவந்தது. இதனால், மற்றொரு ஸ்கேன் சென்டருக்கு சென்று அங்கேயும் ஸ்கேன் செய்த பார்த்தபோது, அதிலும் குழந்தை இல்லை நீர்கட்டி என்பது உறுதியானது.

இதனையடுத்து, உடனே அஸ்வினியும், அவரின் உறவினர்களும் ஆரம்ப சுகாதார மையத்திற்கு சென்று மருத்துவர்களிடம் கேட்டனர். அதற்கு மருத்துவர் ‘சாரி தெரியாம நடந்திருச்சு’ என்று பதிலளித்துள்ளார்.

இது குறித்து காவல்நிலையத்தில் அஸ்வினி குடும்பத்தினர் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

வயிற்றில் குழந்தை என நினைத்து சிகிச்சை - பின்னர் ஸ்கேனில் தெரிந்த உண்மை - அதிர்ந்து போன மருத்துவர்கள்! | Tamilnadu Samugam