கொடைக்கானலில் வழக்கத்தை விட மிக பெரிதாக ஜொலித்த நிலா - அபூர்வ நிகழ்வு
tamilnadu-samugam
By Nandhini
கொடைக்கானல் மலை பகுதிகளில் வழக்கத்தை விட மிக பெரிதாகவும், தெளிவாகவும் நிலா வானில் தோன்றி ஜொலித்தது. இந்த ஆண்டின் கடைசி மற்றும் அதிகம் ஒளிரும் ஸ்ட்ராபெரி மூன் நேற்று வட மாநிலங்களில் தென்பட்டது.
இதை அப்பகுதி பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலை பகுதிகளில் நேற்று இரவு நிலா வானில் தோன்றியது.
ஆனால், இந்த நிலா வழக்கத்தை விட பெரிதாகவும், தெளிவாகவும் தென்பட்டது. இந்த நிலாவினை சுற்றி செங்கதிர்கள் போல ஜொலித்த காட்சியினை ஏரளமான பொதுமக்கள் தங்களது வீட்டில் இருந்தபடியே இந்த அபூர்வ நிகழ்வை கண்டு ரசித்தனர்.