மருத்துவமனையில் டிஸ்சார்ஜ் ஆனார் சிவசங்கர் பாபா - மீண்டும் சிறையிலடைப்பு!

tamilnadu-samugam
By Nandhini Jun 26, 2021 06:25 AM GMT
Report

சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தினார். அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக பாதிக்கப்பட்ட முன்னாள் மாணவிகள் போலீசில் புகார் கொடுத்தனர்.

அந்த புகார் மனுவில், மாணவிகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பது, கட்டியணைப்பது, தனி அறைக்கு அழைத்து சென்று சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டார். ஆனால், சிறையில் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் கடந்த சில நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா மருத்துவமனையிலிருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்பு அவர் மீண்டும் போலீசார் புழல் சிறையில் அடைப்பதற்காக அழைத்துச் செல்கின்றனர்.

முன்னதாக சிவசங்கர் பாபா மீது, மேலும் 2 மாணவிகள் பாலியல் புகார் கொடுத்துள்ளனர். மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதால் இதன் அடிப்படையில் அவர் மீது மேலும் ஒரு போக்ஸோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது