டுவிட்டரில் தேசிய அளவில் #INDIAisUNION டிரெண்டாகிறது!

tamilnadu-politics
By Nandhini Jun 26, 2021 05:01 AM GMT
Report

இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை வலியுறுத்தி டுவிட்டரில் #INDIAisUNION என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல், மத்திய அரசு என்பதை ஒன்றிய அரசு என்று சொல்லி கொண்டு வருகிறது.

இது குறித்து சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே வருகின்றன. அப்படி சொல்லக்கூடாது என்று பலர் வலியுறுத்தினார்கள். ஆனால், நாங்கள் அப்படித்தான் சொல்வோம் என்று திமுக தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றுக்கொண்டிருக்கிறது. சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் தனது உரையில் பேசும்போது, ஒன்றிய அரசு என்று கூறினார்.

அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தியா Union Of States என்றே வரையறுக்கப்பட்டுள்ளது. மாநிலங்களால் ஆனதுதான் இந்தியா. ஒன்றியம் என்ற சொல்லில்தான் கூட்டாட்சித் தத்துவம் அடங்கியுள்ளது. அதனால்தான் பயன்படுத்துகிறோம். பயன்படுத்துவோம் – பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என்றார்.

ஒன்றிய அரசு என்ற சொல்லுக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், தி இந்து பத்திரிகை, we will continue to use the term ‘union gov.’, says stalin என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மேலும் தி இந்து குழும தலைவர் ‘இந்து’என்.ராம் டுவிட்டர் பக்கத்தில், முதல்வர் சட்டப்பேரவையில் பேசும்போது ஒன்றிய அரசு என்று கூறியது முற்றிலும் சரியானது. பாஜக இதனை வெளிப்படையாக, முதன்மையாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

குடியரசாகவும் கூட்டாசி அரசியலைப்பு சட்டத்திற்குள்ளும் இருக்கும் இந்தியா, ஒன்றிய அரசுதான் என்பதில் எந்த விதமான சர்ச்சைக்கும் இடமில்லை. பாரத் என்று சொல்லப்படும் இந்தியா ஒன்றிய அரசாகத்தான் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று இந்தியா ஒரு ஒன்றியம் என்பதை வலியுறுத்தி என்று டுவிட்டரில் #INDIAisUNION என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.