15 நாளாக உணவு, தண்ணீர் தராமல் இருட்டு அறையில் கொடுமை - வெளிநாட்டில் தமிழ் இளைஞர் ஆடியோவால் பரபரப்பு

tamilnadu-samugam
By Nandhini Jun 25, 2021 11:57 AM GMT
Report

இராமநாதபுரம் மாவட்டம், அக்கிரமேசி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கோபாலின் . இவருடைய மகன் கவீன் (32), இவர் கப்பல் டீசல் இன்ஜினியராக இந்தோனேஷியாவில் வேலை செய்து வந்துள்ளார்.

இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இந்தோனேசியாவில் வேலை பார்த்து வரும் கவின் உட்பட 6 பேர், கடந்த 8ம் தேதி சொந்த ஊர் திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது, அவர்களிடம் போதிய ஆவணங்கள் இல்லை என்று கூறி, விமானநிலைய போலீஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இவர்களை கைது செய்த போலீசார் பாட்டம் என்ற இடத்தில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர்.

இது குறித்து தனது குடும்பத்திற்கு கவீன் அனுப்பிய அனுப்பிய ஆடியோ மெசேஜில், 15 நாட்களாக உணவு, தண்ணீர் தராமல் இருட்டு அறையில் அடைத்து வைத்திருப்பதாக கதறி அழுதுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கவீன் குடும்பத்தினர் உடனடியாக பரமக்குடி வந்த ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் சந்திரகலாவை சந்தித்து, இந்தோனேசியா சிறையில் வாடும் மகன் உட்பட 6 பேரை மீட்க இந்திய தூதரகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்தார்.

அதற்கு கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். தற்போது, கவீன் கண் கலங்கிய நிலையில் பேசிய அந்த ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரவி வருகிறது.   

15 நாளாக உணவு, தண்ணீர் தராமல் இருட்டு அறையில் கொடுமை - வெளிநாட்டில் தமிழ் இளைஞர் ஆடியோவால் பரபரப்பு | Tamilnadu Samugam