மணமகன் செய்த தவறால் திருமணமே நின்று போன பரிதாபம்! அதிர்ச்சி சம்பவம்
உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அர்ஜுன் சிங். இவர் தன்னுடைய மகள் அர்ச்சனாவிற்கு, சிவம் என்ற நபருடம் திருமணம் நிச்சயம் செய்தார்.
அதனையடுத்து, கடந்த 20ம் தேதி திருமண நாள் அன்று, மணமகள் மற்றும் மணமகன் இருவரும் ஊர்வலம் சென்று திரும்பினர். ஆனால், பெண்ணின் குடும்பத்தினருக்கு மாப்பிள்ளை மீது சந்தேகம் வந்துள்ளது. எப்போதும் சிவம் கருப்பு கண்ணாடி அணிந்து கொண்டுதான் இருந்துள்ளார்.
திருமணத்தின்போதும் அவர் அந்த கருப்பு கண்ணாடியை கழட்டவே இல்லை. இதனால், சந்தேகம் அடைந்த பெண் குடும்பத்தார், மணப்பெண் வீட்டில் இருந்த செய்தித்தாளை, கண்ணாடி இல்லாமல் படிக்கும் படி கூறியுள்ளனர். அப்போது அவர் வாசிக்க தவறினார். இதனால், மணப்பெண் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மணப்பெண் திருமணத்தை நிறுத்திவிட்டார்.
மாப்பிள்ளை வீட்டார் தங்களிடம் உண்மையை கூறாமல் ஏமாற்றியதாக மணப்பெண் வீட்டார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மாப்பிள்ளை வீட்டாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan